Skip to main content

உண்மையான தலைவராக பேசியிருக்கிறார் ஸ்டாலின்.... ஸ்டாலின் குறித்து ராகுல் காந்தி

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

 

rahul gandhi stalin

 

 

 

 

 

ராகுல் காந்தி, திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

 

மக்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது என்றால் காங்கிரஸ் மழைக்கால கூட்டத்தொடரில் அந்த மசோதாவிற்கு முழு ஆதரவு அளிக்கும் என்று கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தின் நகலையும் ட்விட்டரில் பதிவிட்டார்.

 

 

நேற்று ராகுல் காந்தியின் இந்த முடிவுக்கு ஆதரவளித்து திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலினும் ட்விட்டரில்," திமுக தலைவர் கலைஞர் பெண்களின் அதிகாரத்திற்காக வாதாடியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த முடிவிற்கு திமுக முழு ஆதரவு கொடுக்கும். பிரதமரும் இந்த மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும்" என்று ரீடிவிட் செய்துள்ளார். 

 

 

 

 

 

தற்போது அந்த ரீ ட்விட்டிற்கு ராகுல் காந்தி," நன்றி. உண்மையான தலைவராக பேசியுள்ளீர்கள் மற்றும் தமிழ்நாட்டின் சிறந்த மகன். இந்தியாவின் வளர்ச்சியை துரிதப்படுத்த பெண்களால் தான் முடியும். இதை பெண்கள் இடஒதுக்கீடு உண்மையாக்கும். அனைத்து கட்சிகளும் ஒன்று சேரும் நேரம் இது" என்று மீண்டும் ரீ ட்விட் செய்துள்ளார்.  

 

  

சார்ந்த செய்திகள்