Skip to main content

தர்ணா போராட்டத்தில் ராகுல் காந்தி!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

rahul gandhi

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காகக் காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

12 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவிடம் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

 

இதனைத்தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களும் இரண்டாவது நாளாக இன்று (02.12.2021) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், 12 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடைநீக்கத்தை எதிர்த்து நடைபெறும் தர்ணா போராட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளார்.

 

இதற்கிடையே மாநிலங்களவை, எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்களால் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மக்களவையும் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்