Skip to main content

இறுதி நாளில் வேட்பு மனுதாக்கல் செய்த ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள்!

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 21- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23- ஆம் தேதி தொடங்கியது. இதுவரை நாம் தமிழர் கட்சி, சோஷியலிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 

puducherry byasssembly election nomination filed in admk and congress

இந்நிலையில் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 30/09/2019) காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனா என்கிற புவனேஸ்வரன் மற்றும் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை சுற்றுலாத்துறை இயக்குனரும், தேர்தல் துறை அதிகாரியுமான மன்சூரிடம் தாக்கல் செய்தனர். 

puducherry byasssembly election nomination filed in admk and congress

 


காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்தார். அவருடன் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனா என்கிற புவனேஸ்வரனுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.




 

சார்ந்த செய்திகள்