Skip to main content

பெட்ரோல் விலை ரூ. 200ஐ கடந்தால் இந்த ஆஃபர் வழங்கப்படும் - பாஜக தலைவர் அறிவிப்பு!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

jkl

 

பெட்ரோல் விலை ரூ. 200ஐ கடந்தால் பைக்கில் செல்ல மூன்று பேர்வரை அனுமதி வழங்கப்படும் என்று பாஜக தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்த வண்ணம் உள்ளது. பெட்ரோல் விலை சில மாநிலங்களில் ரூ. 110ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை இன்னும் சில தினங்களில் செஞ்சுரி அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை உயர்வைக் கவனத்தில்கொண்ட பலர், தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறிவருகிறார்கள். இந்நிலையில், பெட்ரோல் விலை ரூ. 200ஐ கடந்தால், அதற்குப் பதிலாக பைக்கில் இருவருக்குப் பதில் மூவர் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிதா தெரிவித்துள்ளார். மூன்று பேர் பயணம் செய்ய அனுமதி அளிப்பது என்பது மாற்று யோசனையா? என்று காங்கிரஸ் கட்சி அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்