Skip to main content

உங்க குழந்தைங்க ஃபோனில் எதைப் பார்க்கலாம் என்று நீங்கள் முடிவு செய்யலாம்... - பெற்றோருக்கு கூகுள் தந்த பரிசு

Published on 20/09/2018 | Edited on 20/09/2018

 

 

google

 

பொதுவாக வீடுகளில் பெற்றோர் ஒரு அறையிலும் குழந்தைகள் ஒரு அறையிலும் இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெரும்பான்மையான நேரங்களில் அவர்கள் செல்ஃபோனிலேதான் மூழ்கிக் கிடப்பார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள், எதை பார்க்கிறார்கள் என்று தெரியாமல் குழந்தைகளை யாராவது தவறாக வழி நடத்திவிடுவார்களோ, இணையத்தில் தவறான விஷயங்களைப் பார்த்து தீயபழக்கங்களுக்கு ஆளாகிவிடுவார்களோ என்றெல்லாம் கவலைப்பட்டு இருப்போம். இதற்கெல்லாம்  முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூகுள் நிறுவனம் புதிதாக 'ஃபேமிலி லிங்க்' (family link) என்னும் செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது 2017-ஆம் ஆண்டு மார்ச் 17 முதலே உலகில் சில பகுதிகளில் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து  'ஃபேமிலி லிங்க்'  செயலி இந்தியாவில் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த தருணத்தில் சமீபத்தில் 'ஃபேமிலி லிங்க்' செயலியை இந்தியாவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 



'ஃபேமிலி லிங்க்' செயலியைப் பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செல்ஃபோன் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம். குறிப்பாகக் குழந்தைகள், எந்தெந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம், எவ்வளவு நேரம் செல்ஃபோனில் விளையாடலாம், குழந்தைகள் செல்ஃபோனில் என்ன செயகிறார்கள், அவர்கள் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று அத்தனையும் பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து  'ஃபேமிலி லிங்க்'  செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குழந்தைகள் உபயோகம் படுத்தும் செல்ஃபோனில் அவர்களுக்கென ஒரு 'கூகுள் ஐடி'யை உருவாக்கி, அதன் மூலம் பெற்றோர்கள் குழந்தைகளின் செல்ஃபோனை கட்டுப்படுத்தலாம். இனி குழந்தைகள் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும், எதை பார்க்க வேண்டும், எதை பார்க்கக்கூடாது என்று பெற்றோர்கள் கண்காணிப்பிலேயே  இருக்கலாம்.


 

சார்ந்த செய்திகள்