Skip to main content

21-வது மாடியில் இருந்து தூக்கிவீசப்பட்ட பச்சிளம் குழந்தை பலி!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019


மாராட்டிய தலைநகர் மும்பைக்கு அருகில் உள்ள கண்டிவாலி பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் கட்டடத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றை அடையாளம் தெரியாத நபர்கள் தூக்கி வீசியுள்ளார்கள். 21வது மாடியில் இருந்து குழந்தை தூக்கி வீசப்பட்டதால் அந்த குழந்தை விழுந்த இடத்திலேயே உயிரிழந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  தனிப்படைகள் அமைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 



மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், இன்னும் சில தினங்களில் குற்றவாளியை கண்டுபிடிப்போம் என்றும் காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்