Skip to main content

ஹோட்டல் அறையில் மர்மம்!! நடிகை உடல் கண்டெடுப்பு!!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018

 

sucide

 

 

 

மேற்கு வங்காளத்தில் ஹோட்டல் அறையில் நடிகை இறந்துகிடந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஒரு அறையில் இருந்து துர்நாற்றம் வர அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு ஹோட்டல் நிர்வாகம் புகார் தெரிவித்தது. இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் மேற்கு வங்கத்தில் புகழ்பெற்ற நடிகையான பாயெல் சக்ரபோர்டி என்பவர் இறந்து கிடந்தார். 

 

போலீசார் அவர் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அது தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று மாலையே அவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரேதபரிசோதனை அறிக்கைக்கு பின் முதல்கட்ட தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்