Skip to main content

மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதை தடுத்ததாலே எனக்கு எதிராக கூட்டணி- மோடி

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
modi


இன்று எதிர்கட்சிகளில் பலர் ஒருங்கிணைந்து மேற்கு வங்கத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். இதில் அனைவருமே மோடியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக பேசினர். 
 

இந்நிலையில், சில்வாசாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோடி, ‘ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என் மீது கோபம் இருக்கிறது. ஏனென்றால் மக்கள் பணத்தை அவர்கள் சுரண்டுவதை நான் தடுத்துவிட்டேன். மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதை தடுத்ததால் எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கிறது. கூட்டணியில் முழுமையான ஒருங்கிணைப்பின்றி தொகுதி பங்கீட்டுக்கு பேரம் பேசி வருகின்றனர்’ என்று தனக்கு எதிராக கூடியுள்ள எதிர் கட்சிகளை விமர்சித்துள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்