Skip to main content

 ‘மீ டூ’ தொடர்பான வழக்கு - விசாரிக்க ஐகோர்ட்டு மறுப்பு

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
Me Too movement

 

 

‘மீ டூ’ என்னும் இயக்கம் மூலம் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

 

சில நடிகைகள், பெண்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை குறித்து கூறப்படும் புகார்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகமும் இந்த விவகாரத்தில் தங்கள் கடமையைச் செய்ய தவறி விட்டன. 

 

எனவே இவை தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜோகிந்தர் குமார் சுகிஜா என்ற வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார்.

 

இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது, ‘இந்த மனு ஏற்கத்தக்கது அல்ல. எங்களது நேரத்தை வீணடிக்காதீர்கள். பாதிக்கப்பட்ட பெண் இருந்தால் அவர் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும்’ என்று கூறிய நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்