Skip to main content

375 கோடி சொத்து உள்ள தென்னக வேட்பாளர்... மேலும் மனைவி பெயரில் 124 கோடி...

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

jaganmohan reddy nomination filed

 

அந்த வகையில் ஆந்திராவில் முக்கிய காட்சிகளில் ஒன்றாக வளர்ந்திருக்கும் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்துள்ளார். அப்போது அவர் தன்னுடைய சொத்து கணக்குகளை அதில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி தன்னிடம் அசையும் சொத்துக்களாக ரூ.339 கோடி மதிப்புடைய சொத்துக்களும், அசையா சொத்துக்களாக ரூ.35 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் என மொத்தம் 375 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவரது மனைவி பெயரில் 124 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரின் இரண்டு மகள்கள் பெயரிலும் சேர்த்து ரூ.11 கோடி மதிப்புடைய அசையும் சொத்துக்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 46 வயதான ஜெகன்மோகன் ரெட்டி தன் மீது 31 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்