Skip to main content

"சட்டப்படி சரியான பக்கத்தில் உள்ளோம்" - மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக புதிய முதல்வர் கருத்து!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

basavaraj bommai

 

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வார் என நீண்ட நாட்களாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவர் நேற்று முன்தினம் (26.07.2021) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ கூட்டத்தில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இதன் தொடர்ச்சியாக பசவராஜ் பொம்மை, இன்று முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்தநிலையில் அவரிடம் மேகதாது விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மேகதாது விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. சட்டப்பூர்வமாக நாங்கள் சரியான பக்கத்தில் இருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

 

மேலும் அவர், "காவிரி படுகையில் உள்ள உபரி நீரைப் பயன்படுத்துவது எங்களின் உரிமை" எனவும் கூறியுள்ளார். மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக முயற்சி மேற்கொண்டு வருவதும், தமிழ்நாடு அதைத் தீவிரமாக எதிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்