Skip to main content

8 ஆவது நாளாக தொடரும் மீட்புப்பணி... உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு!!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
KERALA LANDSLIDE

 

 

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், 8 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கேரளா மாநிலம் மூணாறு அருகே பெட்டி முடிப் பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலச்சரிவில் 80 பேர் சிக்கிய நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 20 தோட்ட தொழிலார்களின் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. தற்பொழுது மீதமுள்ள நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தென்காசி, தூத்துக்குடி, கயத்தாறு என தென் மாவட்டத்தை சேர்ந்த மக்களிடையே இந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்பொழுது நிலச்சரிவில் சிக்கிய மீதமுள்ள 10க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 10 பேர் நிலச்சரிவில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பெட்டி முடி பகுதியில் கடந்த 7 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில், 8 ஆவது நாளான இன்றும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. அதேபோல் அப்பகுதி மக்கள் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   

 

 

சார்ந்த செய்திகள்