Skip to main content

திடீரென உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட்டின் விலை... 

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும், சினிமாத்துறையில் இருப்பவர்கள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கேரளாவிலும் சமீபத்தில் சினிமா திரையரங்குகளுக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து கூடுதலாக கேளிக்கை வரிவிதியும் விதிக்கப்பட்டது. அதனுடன் வெள்ளப்பாதிப்புக்காக கூடுதலாக செஸ் வரி 1.5 % உயர்த்தப்பட்டது.
 

cinema ticket

 

 

இந்த வரிகளால் தொழில் பாதிக்கப்படும் என்றும் வரியை குறைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கேரள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதை அரசும் நிராகரித்துவிட்டது. 

இன்றுமுதல் திடீரென ஒவ்வொரு வகுப்பிலும் ரூ.10 முதல் ரூ.30 வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து குறைந்த பட்ச கட்டணமாக ரூ.130 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தியேட்டர் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்