Skip to main content

இந்தியாவில் வாட்சப் குறுங்செய்தி ஆப்களுக்கு ஒட்டுமொத்த தடை??-தகவல் தொடர்புத்துறை விளக்கம்

Published on 24/08/2018 | Edited on 24/08/2018

 

watsapp

 

 

 

வாட்சப் மற்றும் குறுந்செய்தி ஆப்கள் மூலம்  குழந்தை கடத்துதல் போன்ற போலி செய்திகள் பரவுவதாகவும் அதனால் வன்முறைகள் வெடிப்பதால் இதுபோன்ற குறுந்செய்தி ஆப்களுகளை  இந்தியாவில் ஒட்டுமொத்தமாக தடை செய்யும் திட்டம் இருப்பதாகவும் அதற்கான முயற்சிகளை தகவல் தொடர்புத்துறை எடுத்துவருவதாகும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.

 

watsapp

 

 

 

ஆனால் இதுகுறித்து தகவல் தொடர்புத்துறை செயலர் அருணா சுந்தரராஜன் கொடுத்த விளக்கத்தில் இதுபோன்ற குறுந்செய்தி ஆப்களால் போலி செய்திகள் பகிரப்பட்டு வன்முறைகள் வெடிக்கின்றன. குறுந்செய்திகளுக்கான ஆப்களை ஒட்டுமொத்தமாக தடை செய்யும் எண்ணமில்லை ஆனால் தேவையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்