Skip to main content

கரோனாவின் கோரமுகம்: இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

Published on 04/02/2022 | Edited on 05/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு நேற்று சற்று அதிகரித்த நிலையில், இன்று வெகுவாக குறைந்துள்ளது.  நேற்று  ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 433 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 394 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1072 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 55 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு 5 லட்சம் கரோனா உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாக இந்தியா மாறியுள்ளது.

 

அமெரிக்காவில் 9 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும், பிரேசிலில் 6 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 674 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்