Skip to main content

"இளவரசர் ஹாரி என்னை ஏமாற்றிவிட்டார்; கைது வாரண்ட் பிறப்பியுங்கள்" - நீதிமன்றத்தை அதிரவைத்த இந்தியப் பெண்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

prince harry

 

இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான ஹாரி, தனது மனைவியுடன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி சாதாரண குடிமக்களாக வசித்து வருகின்றார். இந்தநிலையில் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் இளவரசர் ஹாரி, திருமணம் செய்துகொள்வதாக தனக்கு வாக்குறுதி தந்ததாகவும், தற்போது அதனை மீறிவிட்டதாகவும் கூறியிருந்தார். எனவே இளவரசர் ஹாரிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்தப் பெண் வலியுறுத்தியிருந்தார்.

 

தன்னுடைய குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, ஹாரி பெயரிலான கணக்கோடு உரையாடிய சில இ-மெயில் ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். இந்த வழக்கு விசாரணையின்போது இங்கிலாந்திற்கு எப்போதாவது சென்றதுண்டா என நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு அவர் இல்லை எனப் பதிலளித்ததோடு, தாங்கள் சமூகவலைதளங்களில் மட்டுமே பேசிக் கொண்டதாக தெரிவித்தார்.

 

விசாரணையின் முடிவில், இந்த வழக்கு ஒரு பகல் கனவு காணுபவரின் கற்பனை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், வழக்கை தொடர்ந்த பெண், போலி வலைதளக் கணக்குகளுடன் பேசியிருக்கலாம் என்றும், அந்த உரையாடல்களைச் சார்ந்து நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியாது என்றும் குறிப்பிட்ட நீதிபதி, உங்களோடு உரையாடிய இளவரசர் ஹாரி, பஞ்சாபில் கிராமத்தில் உள்ள ஏதேனும், இணையதள மையத்தில் அமர்ந்திருக்கலாம் எனவும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்