Skip to main content

உலகில் அதிக மாசு - முதலிடத்தில் தலைநகரம்

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

air pollution

 

உலகில் அதிக மாசு நிறைந்த 10 நகரங்களில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. ஒரு ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

ஹெல்த் எஃபெக்ட் இன்ஸ்டிடியூட் எனும் நிறுவனம் சமீபத்தில் "நகரங்களில் காற்றின் தரம் மற்றும் ஆரோக்கியம்" என்னும் தலைப்பில்  ஒரு ஆய்வை  மேற்கொண்டது. உலகெங்கும் அதிக மக்கள் தொகை கொண்ட 7000 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 103 நகரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டது. ஹெல்த் எஃபெக்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பினர் காற்றில் தூசித்துகள்கள் கலந்துள்ள விதம் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு கலந்துள்ள விதம் ஆகிய இரண்டு விஷயங்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் அதிக மாசு கொண்ட நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தை டெல்லி பெற்ற நிலையில் இரண்டாம் இடத்தை கொல்கத்தாவும், மும்பை 14ம் இடத்திலும் உள்ளது. முதல் இருபது இடங்களுக்குள் மற்ற இந்திய நகரங்கள் எதுவும் இடம் பெறவில்லை. 2019ம் ஆண்டு மட்டும் டெல்லியில் காற்று மாசுபாட்டின் காரணமாக  29,900 மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் கொல்கத்தாவில் 21,380 மரணங்களும் மும்பையில் 16,020 மரணங்களும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்