Skip to main content

கரோனா தடுப்பூசி பக்கவிளைவால் முதல் மரணம் - உறுதிப்படுத்தியது இந்தியா!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

CORONA VACCINE

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு காய்ச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டு சில நாட்களில் குணமாகி விடுகிறது. இதற்கிடையே கரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.

 

நோய்த்தடுப்பு மருந்துகளால் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகளை கண்காணிக்கும் குழு, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு கடுமையான பாதிப்புக்குள்ளான 31 வழக்குகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மூவருக்கு அனாபிலாக்ஸிஸ் என்ற கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டதாக அந்த குழு கூறியுள்ளது. அந்த மூவரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் பாதகமான நிகழ்வுகளை ஆய்வு செய்யும் அரசின் குழு தெரிவித்துள்ளது.

 

தடுப்பூசி பக்க விளைவால் இறந்த நபருக்கு 68 வயது என்றும், அவர் மார்ச் 8 ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் பாதகமான நிகழ்வுகளை கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.

  


 

சார்ந்த செய்திகள்