Skip to main content

'சிறுவாணியில் நீர்திறப்பு அதிகரிப்பு...'- தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பதில்!

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

'Increase in water supply in Siruvani ...' - Kerala Chief Minister responds to Tamil Nadu Chief Minister!

 

 

சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அதிகரிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்த நிலையில் பினராயி விஜயன் விளக்கமளித்துள்ளார்.

 

நேற்று இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தில், ''சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை அதிகரிப்பதால் கோவை பகுதியில் உள்ள மக்களுக்குத் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் எனவே சிறுவாணி அணையின் முழு கொள்ளளவு நீர் சேமிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுவாணி அணையிலிருந்து இன்று முதல் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள முதல்வரின்  அறிவிப்பின்படி சிறுவாணி அணையில் நீர் திறப்பு 120 எம்எல்டி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்