Skip to main content

'நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி?' - பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

'How was actor Sanjay Dutt released earlier?' - Court order in Perarivalan case!

 

'நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி?' என்பது குறித்து பதிலளிக்க மஹாராஷ்டிரா தகவல் ஆணையத்திற்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றச்சாட்டு எழுந்து அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு 2013-ஆம் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மும்பை எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 5 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது. அதேபோல் அவருக்குப் பலமுறை பரோலும் வழங்கப்பட்டிருந்தது. இறுதியில் சிறைவாசம் முடிவதற்கு முன்பாகவே (256 நாட்களுக்கு முன்பாகவே ) அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்படி பல்வேறு சலுகைகள் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்டிருந்தன.

 

இந்நிலையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறை அனுபவித்து வரும் பேரறிவாளன் மும்பை எரவாடா சிறைத்துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டபோது, அந்தச் சிறை நிர்வாகம் தகவலைத் தர மறுத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேரறிவாளன் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கான தகவல்கள், எந்த முறையைப் பின்பற்றி அவர் முன்னதாக விடுதலை செய்யப்பட்டார் என்ற தகவல்கள் தனது விடுதலைக்கும் பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் அவர் இந்த வழக்கைத் தொடுத்திருந்தார்.

 

'How was actor Sanjay Dutt released earlier?' - Court order in Perarivalan case!

 

இந்த வழக்கின் விசாரணையில் நடிகர் சஞ்சய் தத் முன்னதாக விடுவிக்கப்பட்டது எப்படி என மகாராஷ்டிரா தகவல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர். அதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்யலாம் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் உள்துறை அமைச்சகத்திற்கும், குடியரசு தலைவருக்கும் ஆளுநர் அனுப்பிவைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்பது தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ள, பேரறிவாளன் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்