ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தடயவியல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் உயிரிழந்த விவகாரம் பூதாகரமாகி வரும் சூழலில், இந்தச் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தடயவியல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "தடயவியல் துறை அறிக்கை, அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அந்தப் பெண் இறந்துள்ளார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. தடயவியல் துறை அறிக்கை மாதிரிகளில் விந்தணுக்களைக் கண்டுபிடிக்கவில்லை, சாதி அடிப்படையிலான பதற்றத்தைத் தூண்டுவதற்காக சிலர் இந்த விஷயத்தை திசை திருப்பி இருப்பதாக தெரிகிறது. அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.