Skip to main content

சிறுத்தையைக் கொன்று சாப்பிட்ட ஐவர் கைது! - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

leopard meat

 

கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில், சிறுத்தையை சமைத்துச் சாப்பிடப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்மாநில வனத்துறையினர் ரெய்டில் ஈடுபட்டனர். அந்த ரெய்டில், 6 வயதான சிறுத்தை ஒன்றை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

முதலில் சிறுத்தை எதிர்பாராத விதமாக வலையில் சிக்கியதாகவே வனத்துறையினர் கருதியுள்ளனர். ஆனால் அதனைக் கொன்று சாப்பிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களது கால்நடைகளை வேட்டையாடி உண்ட சிறுத்தையை, அவர்கள் திட்டமிட்டு பிடித்திருப்பது தெரியவந்தது. மேலும் வனத்துறையினர், இதுகுறித்து பிரத்தியேகமான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

 

சிறுத்தையைக் கொன்று சாப்பிட்டவர்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் எனக் கூறியுள்ள வனத்துறையினர், 10 கிலோ சிறுத்தையின் இறைச்சி, தோல், பற்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். கொல்லப்பட்ட சிறுத்தையின் எடை 50 கிலோ இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், 10 கிலோ இறைச்சி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வனத்துறையினருக்கு மட்டுமில்லாமல், மக்களுக்கும் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்