Skip to main content

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்... திடீரென முடிவை மாற்றிய சிவசேனா...

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

eknath shinde selected as shivsena assembly head

 

 

பாஜக - சிவசேனா கூட்டணி 158 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளபோதும், அமைச்சரவை அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. அதிகாரப் பகிர்வில் 50- 50  என்ற முடிவில் சிவசேனா உறுதியாக இருப்பதால் அங்கு அரசு அமைப்பது தாமதமாகி உள்ளது. முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் சிவசேனா பிடிவாதமாக உள்ளதோடு, அது தொடர்பான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறது.

சிவசேனா இவ்வளவு பிடிவாதமாக உள்ளதால் உத்தவ் தாக்ரேவின் மகனான ஆதித்யா தாக்ரேதான் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிய திருப்பமாக அக்கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்