Skip to main content

சிவப்பு விளக்கு பகுதியால் நேர்ந்த விபரீதம் -இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்த ஊர்மக்கள்

Published on 21/08/2018 | Edited on 21/08/2018

 

பீஹாரில் இளைஞர் ஒருவர் மர்மமாக கொலைசெய்யப்பட்டதை அடுத்து கொலைசெய்யப்பட்ட இளைஞரின் சொந்த ஊர் மக்கள் ஒரு ஊரையே அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பீஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் பியா எனும் காவல்நிலையத்திற்கு உட்பட்டப்பகுதியில் உள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் 19 வயதுமதிக்கதக்க  இளைஞர் ஒருவர் மர்மமானமுறையில் அடித்து கொலைசெய்யப்பட்டுக்கிடந்தார். இறுதியில் அந்த இளைஞர் தாமோதப்பூரை சேர்ந்த ஷா என்ற இளைஞர் என தெரியவந்தது. இதனை அடுத்து அங்குவந்த அந்த இளைஞரின் சொந்த ஊர் மக்கள் அருகில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள இளைஞர்கள்தான் கொலை செய்துள்ளனர் என அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகள் எல்லாவற்றையும் அடித்து தொம்சம் செய்துள்ளனர்.

 

MURDER

 

 

 

மேலும் அப்பகுதியில் ஒரு வீட்டில் இருந்த பெண்ணை அடித்து உடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி அடித்துள்ளனர். அதன் பின் அங்கு வந்த போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டபின் அங்கு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் அதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

   

சார்ந்த செய்திகள்