Skip to main content

உச்சநீதிமன்றத்தில் இன்று அயோத்தி வழக்கு விசாரணை!

Published on 10/05/2019 | Edited on 10/05/2019


உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்தி. இங்குள்ள ராமஜென்ம பூமி  - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம்  2010  ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்ஃப் வாரியம் , நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்துக்கொள்ள உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து 10 க்கும் மேற்பட்ட அமைப்புகள் உச்சநீமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

 

ALLAGABAD

 

 

உச்சநீதிமன்றத்தில் அயோத்தி தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய  அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கில் சமரசம் ஏற்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் அடங்கிய சமரச குழுவை அமைத்தது. இந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா , வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மற்றும் தமிழக உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்தக் குழு 8 வாரக் காலத்தில் அயோத்தி தொடர்பாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த மூவர் குழு நேற்று அறிக்கை தாக்கல் செய்ததாகவும் , இது தொடர்பான வழக்கை இன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்