Skip to main content

ஓ.பி சைனியிடம் இருந்த 2ஜி வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019


நீதிபதி ஓபி சைனியிடம் இருந்து 2 ஜி, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்குகள் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி இந்த  மாதம் இறுதியில் ஓய்வு பெற உள்ளதால்,  வேறு அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.  ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தொடர்பான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை நீதிபதி அஜய்குமார் விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்