Skip to main content

கரோனாவால் இறந்தவரின் உடலை ஜே.சி.பி. வாகனத்தில் மயானத்திற்கு எடுத்துச் சென்ற அவலம்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

ுப

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆந்திராவிலும் கரோனா தொற்றின் பாதிப்பு குறிப்பிடத்தகுந்த அளவு இருக்கின்றது. இந்நிலையில் ஆந்திராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த ஒருவரின் உடலை சுகாதாரத்துறை ஊழியர்கள் ஜே.சி.பி. இயந்திரத்தில் மயானத்திற்குக் கொண்டு சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை செய்த ஸ்ரீகுளம் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர், சுகாதாரத்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் கரோனாவால் இறந்த ஒருவரை டிராக்டரில் கொண்டு சென்ற சம்பவமும் நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்