Skip to main content

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி! ஆம் ஆத்மி அமைச்சர் எச்சரிக்கை! 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

The country's economy is falling! AAP Minister Warning!

 

சன்யுக்த் ரோஜ்கார் அந்தோலன் சமிதி சார்பில் இணையவழி கூட்டம் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில அமைச்சருமான கோபால்ராய் கலந்துகொண்டு பேசினார். ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுதா இந்நிகழ்வில் பங்கேற்றார்.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கோபால்ராய், “இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து வருவது கவலையளிக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. வேளாண் உற்பத்தி பெருகுகிறது. ஆனால் விவசாயிகளின்  வாழ்வாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உற்பத்திக்கான லாபகரமான விலை கொடுப்பதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் உரிய அடிப்படையான திட்டமிடல் இல்லாத நிலை தொடர்கிறது. ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள் நாட்டின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. நாட்டைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள், இளைஞர்கள்,  மாணவர்கள், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடும் தேவை எழுந்துள்ளது. இல்லையேல் நாட்டை பாதுகாக்க முடியுமா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் கச்சா விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே உள்ளது.


 

The country's economy is falling! AAP Minister Warning!

 

அமெரிக்காவின் ஒரு டாலருக்கான இந்திய நாணயத்தின் மதிப்பு 79 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார கொள்கையின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தப்படுகின்றன. பொருளாதாரச் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. 

 


சன்யுக்த் ரோஜ்கார் அந்தோலன் சமிதி, ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22 வரை வேலையின்மைக்கு எதிரான தேசிய இயக்கத்தை அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் விவசாயிகள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் உட்பட 500க்கும் மேற்பட்ட முக்கிய அமைப்புகள் பங்குபெறவுள்ளது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தீர்வு காணத் தேசியக் கொள்கையை உருவாக்குவது காலத்தின் தேவை” என்று தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்