Skip to main content

இந்தியாவிற்குள் நுழைந்து சிறுவனைக் கடத்திச் சென்ற சீன இராணுவம் - பாஜக எம்.பி அதிர்ச்சி தகவல்

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

china

 

சீனா, இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் கிராமங்களை உருவாக்கி வருவதுடன், லடாக்கில் பாலம் ஒன்றையும் கட்டி வருகிறது. சீனா, கிராமங்களை உருவாக்கியுள்ள பகுதிகளும், தற்போது பாலம் கட்டி வரும் பகுதியும் நீண்டகாலமாகவே அந்தநாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்துவருவதாக இந்திய அரசு கூறி வருகிறது. அதேபோல் அருணாச்சல மாநிலத்தின் பகுதிகளுக்கு அண்மையில், சீன மொழிப்பெயர்களைச் சூட்டியது.

 

இதற்கிடையே சீன இராணுவத்தினர், இந்தியாவிற்குச் சொந்தமான பகுதிகளில் அத்துமீறி நுழைவதாகவும், நுழைய முயற்சிப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் இந்தியாவிற்குச் சொந்தமான பகுதியான அருணாச்சலப்பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்திலிருந்து  மிராம் டாரோன் என்ற 17 வயது சிறுவனைச் சீனா இராணுவம் கடத்திச் சென்றுவிட்டதாக, அம்மாநிலத்தின் பாஜக எம்.பியான தபீர் காவ் தெரிவித்துள்ளார்.

 

மேலும், சிறுவன் கடத்திச் செல்லப்பட்ட லுங்டா ஜோர் பகுதியில், சீனா கடந்த 2018ஆம் ஆண்டு 3.4 கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலை அமைத்ததாகவும் தபீர் காவ் குறிப்பிட்டுள்ளார். சீன இராணுவம் இந்தியப் பகுதிக்குள் நுழைந்து சிறுவனைக் கடத்திச் சென்றதாக பாஜக எம்.பி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்