Skip to main content

இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு! - எடப்பாடிக்கு எத்தனையாவது இடம்?

Published on 13/02/2018 | Edited on 20/02/2019

ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு (ஏ.டி.ஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பு இணைந்து, ‘இந்தியாவில் 29 சட்டமன்றங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இருக்கும் முதல்வர்கள் பற்றிய ஆய்வு’ என்ற தலைப்பிட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில் முதல்வர்களின் சொத்து மதிப்பு, குற்ற வழக்குகள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

 

இந்த அறிக்கையின் படி இந்தியாவில் மொத்தமுள்ள முதல்வர்களில் 35% அல்லது 11 பேரின் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 26% பேரின் மீது கொலை, கொலை முயற்சி, வளங்கள் அல்லது சொத்துகளை ஏமாற்றுவது, அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன. 

 

மேலும், இந்த முதல்வர்களில் 25 பேர் அல்லது 81% பேர் கோடீஸ்வரர்கள் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆந்திரப்பிரதேசம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.177 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். அருணாச்சலப்பிரதேசத்தின் பீமா கண்டு மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றனர்.

 

Eps

 

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் ரூ.27 லட்சம் சொத்துகளுடன் பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.7.80 கோடி சொத்து மதிப்புடன் 12ஆம் இடத்தில் இருக்கிறார். புதுச்சேரி முதல்வர் ரூ.9.65 கோடி சொத்துகளைக் கொண்டிருக்கிறார்.

 

மேற்குறிப்பிட்ட தகவல்கள் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் அவரவர் வேட்புமனுக்களின் குறிப்பிட்டுள்ள விவரங்களேயாகும். இந்த விவரங்கள் அடுத்தடுத்த தேர்தல்களைப் பொருத்து மாறலாம் என ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம்; முதல்வர் விளக்கம்!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
kilambakkam Bus Station Affair CM explanation

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று (12.02.2024) காலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். ஆளுநர் தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் எனத் தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல., ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.இது குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது. தமிழக அரசின் உரையில் உள்ள கருத்துகளைத் தவிர்த்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய சொந்தக் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார். இதனை மீறும் வகையில் சட்டமன்ற பேரவையில் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பதிவை ஆளுநர் ஆர்.என். ரவி மரபுகளை மீறி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பதிவை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்ற விதிகளை ஆளுநர் ஆர்.என். ரவி மீறி உள்ளார் இது சட்டமன்ற மரபுகளை மீறிய செயல் எனப் பல்வேறு தரப்பினர் மீண்டும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.க.செல்வம், வடிவேலு, எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டன. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ். பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். இராஜேந்திரன், தேமுதிக நிறுவனத் தலைவரும்,  முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்ப்ட்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியது அனைத்தும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் தெரிவித்த குறைகளைத் தான் நான் அறிக்கையாக வெளியிட்டேன். முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு திறந்திருந்தால் பேருந்து நிலையம் தொடர்பாக பிரச்சனை எழுந்திருக்காது என்பதை அவையில் குறிப்பிடுகிறேன். சிறு சிறு பிரச்சனைகள் இருப்பதாக அரசு தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சிறு சிறு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இருந்தால் இந்த விவாதமே ஏற்பட்டிருக்காது” எனத் தெரிவித்தார்.

kilambakkam Bus Station Affair CM explanation

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளிக்கையில், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதைப் போன்று சிறு சிறு பிரச்சனைகள் மட்டுமல்ல பெரும், பெரும் பிரச்சனைகள் எல்லாம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தன. அந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்து தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இன்னும் ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள், நேரடியாக வாருங்கள். அந்த பிரச்சனைகளையும் தீர்த்து வைப்போம்”எனப் பதிலளித்தார். 

Next Story

''ஆயிரம் எடப்பாடி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமம் இல்லை'' - வைத்தியலிங்கம் பேச்சு

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

"Thousands of edapadis are not equal to one OPS" - Vaidhyalingam speech

 

அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும், தனது பலத்தை நிரூபிக்கவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்த மாநாட்டில் பேசிய ஓபிஎஸ்-இன் தீவிர ஆதரவாளர் வைத்திலிங்கம்,  '' 'பார் சிறுத்ததால் படை பெருத்ததோ; படை பெருத்ததால் பார் சிறுத்ததோ' என்று பாரதிதாசன் கூறுவார். அதுபோல் 'திருச்சி சிறுத்ததால் ஓபிஎஸ் படை பெருத்ததோ; ஓபிஎஸ் படை பெருத்ததால் திருச்சி சிறுத்ததோ' என்ற வரிகளுக்கு ஏற்ப வங்கக் கடலும் அரபிக்கடலும் இந்து மகா சமுத்திரமும் ஒன்றாக சங்கமித்தது போல் மக்கள் கடல் இங்கே திரண்டு இருப்பதை பார்க்கும் பொழுது ஆயிரம் எடப்பாடி வந்தாலும் ஒரு ஓபிஎஸ்க்கு சமம் இல்லை. இந்தக் கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களை மதிக்காதவன் அழிந்து போவான். நிச்சயமாக இதற்கு தர்மம் பதில் சொல்லும். மலை குலைந்தாலும் நிலை குலையாமல் மாண்போடு இருக்கின்ற ஓபிஎஸ், நாலு பக்கமும் இருந்து அம்புகள் வந்தாலும் புன்னகையால் அதை சிதறடிக்க கூடிய ஆற்றல் பெற்றவர்.

 

பொறுமைக்கு எடுத்துக்காட்டு என ஜெயலலிதா சொன்னார். ஒரு பதவியை ஒருவரிடம் ஒருவரிடம் கொடுத்துவிட்டால் திருப்பிக் கொடுப்பார்களா? இருக்காது என்பது வரலாறு. அதை திருப்பிக் கொடுத்தவரே ஓபிஎஸ்தான் என்று ஜெயலலிதா சொன்னார். ஒருமுறை அல்ல மூன்றுமுறை கொடுத்த முதலமைச்சர் பதவியை திருப்பிக் கொடுத்த பரதன் ஓபிஎஸ். சரஸ்வதி சபதம் என்ற படத்தில் கே.ஆர்.விஜயா பிச்சைக்கார பெண்ணாக நடிப்பார். அவரை யானை மாலையிட்டு ராணி ஆகுவார். ராணி ஆனவுடன் திமிர் அதிகமாக இருக்கும். அதை அடக்குவார்கள். அதுபோல எடப்பாடியின் திமிரை தொண்டர்கள் நீங்கள் தான் அடக்க வேண்டும். 

 

ஜெயலலிதாவிற்கும், எம்.ஜி.ஆருக்கும் யார் துரோகம் செய்தாலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். எம்ஜிஆர் வகுத்த விதிகளை, ஜெயலலிதா கட்டிக் காத்த விதியை காலில் மிதித்து, ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்பதை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமிக்கு நாம் தண்டனை கொடுத்தாக வேண்டும். இன்று எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார். கொடநாடு கொள்ளை நடந்த நாள் ஏப்ரல் 24 இன்று. 2017 ஏப்ரல் 24ஆம் தேதி தேதிதான் அது நடந்தது. அந்த நாளில் தான் இந்த மாநாடு நடக்கிறது. அந்த குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் இறைவன் தண்டிப்பான்'' என்றார்.