Skip to main content

நெருக்கடி அளிக்க தயாரான எதிர்க்கட்சிகள்... முதல்நாளே வாபஸ் ஆகும் வேளாண் சட்டங்கள்! 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

farmers

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒருவருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார்.

 

இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா, குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட பட்டியலிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இந்தச் சூழலில் காங்கிரஸ், கட்சி குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளிலேயே (29 ஆம் தேதி) விவசாயிகள் பிரச்சனையை எழுப்ப முடிவு செய்தது. மேலும், அண்மையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும், வேளாண் சட்டங்களை முதல் நாளிலேயே திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்தநிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா முதல்நாளிலேயே தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்

 

காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தங்களது கட்சி எம்.பிக்கள் அனைவரும், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளன்று கட்டாயம் அவையில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்