Skip to main content

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படவில்லை...!

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், நிதி பற்றாக்குறை காரணமாக அந்நிறுவனத்தின் 1.76 லட்சம் ஊழியர்களுக்குப் பிப்ரவரி மாதச் சம்பளத்தை கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பது இது தான் முதல் முறை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

 

bsnl

 

கடந்த 5 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் முதல் முறையாக ஊழியர்களின் சம்பளத்தை அவர்களுக்கு கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது அந்நிறுவனம். 
 

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கங்கள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு கடிதம் மூலம், ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 55 சதவீத வருவாய் ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் செலவிடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டு 8 சதவீதம் கூடிக்கொண்டும் வருகிறது. 
 

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர் இழப்புகளை சந்தித்து வருவதாக சமீபத்தில் வந்த தகவல்கள் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி 2017-18 ஆண்டு இறுதி வரை பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடப்போவதாகவும், ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகவும் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் தகவல்கள் வந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடும் எண்ணம் எதுவும் இல்லை. வதந்திகளை மக்களும், ஊழியர்களும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனும் விவகாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்