Skip to main content

கங்குலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மம்தா பானர்ஜி!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான (Board of Control for Cricket in India- 'BCCI') சவுரவ் கங்குலி தனது 49- வது பிறந்தநாளை நேற்று (08/07/2021) கொண்டாடினார். அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், முன்னாள் வீரர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். 

 

அந்த வகையில், கொல்கத்தாவில் உள்ள சவுரவ் கங்குலியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார். பின்னர், கங்குலிக்கு மஞ்சள் நிற ரோஜாக்களைக் கொண்ட பூங்கொத்து மற்றும் இனிப்பு பாக்ஸ்-யை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினருடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினார்.

 

 

சார்ந்த செய்திகள்