Skip to main content

ஐ.எஸ். அமைப்புக்கு அனுப்பட்ட பெண்கள்! குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

Bail detained by kerala high court

 

                                                                                                                                                                                          கேரளாவில் இருந்து செவிலியர் மற்றும் படித்த இளம் பெண்களை அரபு நாடுகளில் சூப்பா் மார்க்கெட் போன்ற கடைகளில் அதிக சம்பளத்துடன் வேலை செய்வதற்காக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று அங்கு அடிமை வேலைகளில் ஈடுபடுத்துவதோடு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான பாலியல் தேவைகளுக்கு சப்ளை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த கொடுமையிலிருந்து தப்பி வந்த 31 வயது இளம் பெண், கொச்சி கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வரும் போலீசார், கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 4 ஆண்டுகளாக இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி 200க்கு மேற்பட்டவர்களை அரபு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில் 90 சதவீத பெண்களை வீட்டு வேலைக்கு அடிமைத் தனமாக இருக்க வற்புறுத்தி கொடுமை செய்துள்ளனர். ஏராளமான பெண்களை சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அவர்களின் பாலியல் தேவைகளுக்காக அனுப்பியுள்ளனர். இதுஎல்லாம் தெரிந்தே திட்டமிட்டு அந்த நிறுவனம் அனுப்பி வந்துள்ளது.

 

இது சம்பந்தமாக தரகராகச் செயல்பட்ட கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பானு ஃபர்கானா மற்றும் கண்ணூரைச் சேர்ந்த மஜீத், பத்தணம்திட்டயைச் சேர்ந்த அஜிமோன் ஆகியோர் மீது கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இதில் பானுவின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்த போது, அவர் தப்பி குவைத்துக்கு சென்று தலைமறைவானார். அதே போல் மஜீத் பக்ரைனியில் உள்ளார்.


இதனைத் தொடர்ந்து ஃபர்கானா மற்றும் அஜிமோன் முன் ஜாமீன் கேட்டு எா்ணாகுளம் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதில் இருவருடைய மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அஜிமோன் எா்ணாகுளம் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும் ஃபா்கானா தலைமறைவாகியுள்ளார் இதனையடுத்து அவர் வெளி நாடு தப்பிச் செல்லாதபடி அவரின் பாஸ்போட்டை முடக்கி கேரளா போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்