Skip to main content

சர்வதேச விமான போக்குவரத்து எப்போது..? விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய அறிவிப்பு...

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

aviation ministry about resuming international flight service

 

 

சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை வரும்  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிப்பின்போது உள்நாட்டு விமானங்கள் இயங்க மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், சர்வதேச விமான போக்குவரத்து இன்னும் முடக்கப்பட்டுள்ள சூழலில், சர்வதேச விமானங்கள் எப்போது இயக்கப்படும் எனக் கேள்வி எழுந்தது. நேற்று முன் தினம் ஊரடங்கின் நான்காம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு  வெளியிட்டது.

 

இதில், மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்,  சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை வரும்  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனவே, சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து இதன்பிறகே முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்