Skip to main content

"8 கோடி ரூபாய் மதிப்புள்ள நாயை காணவில்லை... கண்டுபிடிப்போருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு"...

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

8 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நாயைக் காணவில்லை என பெங்களூருவில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

 

8 crore worth alaskan malamute dog missing in bengaluru

 

 

சீனாவிலிருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சதிஷ் என்பவர் 8 கோடி ரூபாய்க்கு அலாஸ்கன் மாலமியூட் நாயை வாங்கியுள்ளார். தற்போது இந்த நாயை காணவில்லை என பெங்களூருவின் ஹனுமந்த நகர் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார். 3 வயதான அந்த நாய் 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும், அதன் ஒவ்வொரு குட்டியும் சுமார் 2 லட்சம் வரை விலை போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன் நாயை யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால், அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்