Skip to main content

ஆறு மாத குழந்தையை தீயில் தூக்கி எறிந்த தாய்!

Published on 27/04/2018 | Edited on 27/04/2018

பெற்ற தாயே ஆறு மாத குழந்தையை தீயில் தூக்கி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Child

 

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ளது சலியா சஹி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று தகராறு முற்றிய நிலையில், கணவனின் மீது ஆத்திரமடைந்த மனைவி, துணிமூட்டையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார். தொடர்ந்து கொளுந்துவிட்டு எரிந்த தீயில் தனது ஆறு மாத குழந்தையை தூக்கி வீசியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், தீயில் கருகிய குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

90 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தை உயிர்பிழைப்பது சந்தேகம் என தெரிவித்திருந்தனர். அதேபோல், இன்று அந்தக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 

 

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தற்போது கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணை விசாரணை செய்தபோது, மனநலம் பாதித்திருப்பது தெரியவந்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்