Skip to main content

ரூ.30 லட்சம் மதிப்புள்ள கரோனா சோதனை சாதனங்கள் மாயமானதால் பரபரப்பு!

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

jkl

 

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக டிஜிட்டல் தெர்மோ மீட்டர், பி.பி.இ கிட், குப்பை தொட்டி மற்றும் நான்கு சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அளிப்பதற்காக சுகாதாரத்துறையினர் மூலம் வாங்கி தேர்தல் துறைக்கு அளிக்கப்பட்டது.

 

ஆனால் தேர்தல் முடிந்தபிறகு வாக்குச்சாவடிகளில் இருந்து இச்சாதனங்கள் நலவழித்துறைக்கு ஒப்படைக்கவில்லை. சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் தெர்மா மீட்டர், பி.பி.இ கிட், நான்கு சர்க்கர நாற்காலிகள் மாயமாகியுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இவைகள் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்