Skip to main content

11ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து வெடித்துச் சிதறிய மின்சாதன பொருட்கள்! - ஒருவர் பலி

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

சாதாரண வீட்டு உபயோக மின்சாரத்திற்கு பதிலாக 11ஆயிரம் வோல்ட் பாய்ந்ததால் வீடுகளில் இருந்து மின்சாதன பொருட்கள் வெடித்துச் சிதறின.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீருட் மாவட்டம் இன்சோலி கிராமத்தில் உள்ளது குவான் பட்டி பகுதி. இந்தப் பகுதியில் நேற்று மாலை திடீரென்று வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மின்சாதனப் பொருட்கள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் முதலில் தெரியாமல் இருந்த நிலையில், குவான் பட்டி பகுதியில் மட்டும் வீடுகளுக்கு செல்லும் மின் கடத்திகளில் 11ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது. மின்கடத்திகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் இந்த விபத்துக்கு காரணம் எனவும் தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

 

இந்த விபத்தில் செல்போனை சார்ஜரில் மாட்டியபடியே உபயோகித்த 20 வயது இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். நான்கு பெண்களுக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவித் தொகைகளை அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

லிப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened on The girl who asked for a lift

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.