Skip to main content

பதறிய சீனிவாசன்! பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம்!

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

 

sm


காவரி நதிநீர் மீட்புப் போராட்டத்தின் வெற்றி  விளக்கப் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்துமேட்டில் அதிமுக சார்பில் நடைபெற்றது இக் கூட்டத்தில்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்  சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.  அப்பொழுது ஜெ மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற டிடிவி தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டதையும் 18எம்.எல்.ஏ.கள் மற்றும் டிடிவி.தங்கதமிழ் செல்வனை பற்றியும் காரசாரமாக பேசினார்.

 

  அப்பொழுது ஜெ வால் கொள்ளை அடிக்கப்பட்டு தினகரனிடம் கொடுத்த பணத்தை  வைத்து  வெற்றி பெற்ற18 எம்எல்ஏக்களும் இப்பொழுது அதிமுக வுக்கு துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று அமைச்சர் சீனிவாசன் பேசினார்.  இது தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மட்டுமல்லாமல்  வாட்சப் மற்றும்  பேஸ்புக்குகளிம் அமைச்சர் சீனிவாசனின் பேச்சு  காட்டுத்தீ போல் பரவிவந்தது.  இதை கண்டு திண்டுக்கல்லில் இருந்த    அமைச்சர் சீனிவாசன்  அதிர்ச்சி அடைந்தார்.  உடனே  லோக்கலில்  உள்ள  பத்திரிக்கையாளர்களையும் மீடியாக்களையும் திண்டுக்கல்லில் உள்ள  எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு  வரச்சொல்லியவர் கடந்த 18 ம்தேதி வேடசெந்தூரில் நடைபெற்ற   கட்சி பொதுக்கூட்டத்தில்  நான் அப்படி பேசவே இல்லை.  என்ன பேசினேன் என்றால்  புரட்சி தலைவி  அம்மா  புகழை வைத்து 30வருடங்களுக்கு மேலாக  உடனிருந்த சசிகலா மற்றும்  அவரது குடும்பத்தினர் புரட்சித் தலைவி அம்மாவிற்கு  தெரியாமல் தவறான வழியில்  கொள்ளையடித்த பணத்தை வைத்து  தினகரன் அரசியல் நடத்தி வருகிறார்  என்று  கருத்துப்பட பேசினேனே தவிர  புரட்சி தலைவி  அம்மா வை பற்றி தவறாக  எந்த  கருத்தையும்  நான்  பேசவில்லை  நான்  என்றைக்கும் அம்மா விசுவாசி என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்