Skip to main content

ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! - புறக்கணித்த இந்தியா!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

UNITED NATION HUMAN RIGHTS COUNCIL

 

இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.

 

அவ்வாக்கெடுப்பில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், வங்கதேசம், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள், தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இருப்பினும் பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. 

 

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. அதேநேரத்தில் இந்தியா, இலங்கை அரசியலமைப்பின் 13வது சட்டத் திருத்தத்தை உடனே அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தலை உடனே நடத்தவும் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது. இந்தியாவுடன் சேர்த்து இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்