Skip to main content

பொய்ப்பிரச்சாரம் அம்பலம்! இ-சிகரெட்டுகளுக்கு தடை! 

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

 

இ-சிகரெட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். சிகரெட்டுகளைப் போலவே இ.சிகரெட்டுகளாலும் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது என்பதாலும், இ-செகரெட்டுகளை பயன்படுத்துவோரில் 77 சதவிகிதம் பேர் மாணவர்கள் என்பதால்  அத்தகைய சிகரெட்டுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை  விதிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 

எ

 

எலக்ட்ரானிக் சிகரெட்(Electronic Cigarette) என பொருள்படும் இ-சிகரெட்  என்பது எலக்ட்ரானிக் கருவி. அதற்குள் நிகோடின், கிளிசரின் மற்றும் சில கெமிக்கல் போன்றவை நிரப்பப்பட்டிருக்கும். அந்த கருவிக்குள் இருக்கும் பேட்டரியை செயல்பட வைத்தவுடன், ஏற்படும் வெப்ப ஆற்றலின் உதவியினால், நிரப்பப்பட்டிருக்கும் திரவியம் ஆவியாகி அதனை பயன்படுத்துபவருக்கு புகைபிடிக்கும் போது ஏற்படக்கூடிய உணர்வினை கொடுக்கிறது.

 

எ

 

புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு மாற்றும் என்றும், . சாதாரண சிகரெட்டில் இருக்கக்கூடிய புகையிலை மற்றும் பல பொருள்களானது மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை தரக்கூடியது.  இந்த அபாயங்கள் இ -சிகரெட்டில் இல்லை முதலில் கூறப்பட்டு வந்தது.  ஆனால், இ-சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவதும்,  அதிலிருந்து சிகரெட் பழக்கத்திற்கு தாவுவோரும் அதிகரித்து வருகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.  மேலும்,  இ-சிகரெட்டில் பயன்படுத்தப்படும் நிகோடின் போன்ற பொருள்களினால்  புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  இதனால், உலகநாடுகள் பலவற்றில் இ-சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில்ம் தடை செய்யப்பட்டுள்ளது.

 

இ-சிகரெட்டுகளால் நன்மை என்று பொய்ப்பிரச்சாரம் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது அம்பலமாகிவிட்டதாலும், இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவோரில் 77 சதவிகிதம் பேர் மாணவர்கள் என்பதாலும் மத்திய அரசு இதற்கு அதிரடி முடிவெடுத்து தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்