Skip to main content

மோடி என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமா? புதிய விளக்கம் தந்த ராகுல்காந்தி!

Published on 18/03/2018 | Edited on 18/03/2018

மோடி என்ற பெயருக்கு புதிய விளக்கம் தந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.

 

காங்கிரஸ் கட்சியின் 84ஆவது தேசிய மாநாடு டெல்லியில் வைத்து நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இறுதி நாளான இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பேசிவருகின்றனர். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

 

இந்த மாநாட்டில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும், வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுள்ளன. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் உரையில் முழுக்கமுழுக்க பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துகளையே தெரிவித்திருந்தார்.

 

‘இந்த நாட்டை பெரிதும் நேசிக்கும் இஸ்லாமியர்களை இந்தியாவிற்கு அந்நியமானவர்களே.. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். தமிழர்களின் அழகிய மொழியான தமிழை மாற்றிக்கொள்ள நிர்பந்திக்கிறார்கள். வடகிழக்கு மக்களின் உணவு, உடை விவகாரங்களில் மூர்க்கமாக தலையிடுகிறார்கள்’ என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

 

 

காங்கிரஸ் கட்சியின் முந்தைய கால பிழைகள் குறித்து பேசுகையில், ‘முந்தைய காலங்களில் நமது தலைமையில் அமைக்கப்பட்ட அரசு, மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யவில்லை. நாம் மக்களின் வாழ்க்கைச்சூழலை குறைத்துவிட்டோம் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக்கூறிய அவர், ‘நாம் காங்கிரஸை மாற்றவேண்டும். நமது தலைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையில் மிகப்பெரிய சுவர் இருக்கிறது. எனது முதல் திட்டமே அந்த சுவரை தகர்ப்பதுதான். நான் நம் தலைவர்களிடம் அந்தச் சுவரை அன்பினால் தகர்ப்பது குறித்து கலந்தாலோசிக்க இருக்கிறேன்’ எனவும் கூறினார்.

 

மேலும், ‘மோடி என்றால் உண்மையில் என்ன தெரியுமா? மிகப்பெரிய கொடூர முதலாளிகளுக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையிலான கூட்டணியைத்தான் மோடி என்று அடையாளப்படுத்த முடியும். காங்கிரஸ் கட்சி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கூட்டிச் செல்லும். ஆனால், நாம் மனிதர்களாயிற்றே.. தவறுகள் செய்ய நேரிடும். ஆனால், மோடி தன்னை மனிதன் என்று நினைக்காமல், கடவுளின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என கிண்டலடிக்கும் விதமாக பேசினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.